கோவை, ஆக. 9 –
பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வரும் ஐ.டி.எம் இன்டர்நேஷனல் நர்சிங் கல்லூரி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் மிகக்குறைந்த கட்டணத்தில் மாணவ சேர்க்கை, சான்றிதழ் வழங்குதல், இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் பொறியாளர் சரவணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆனைமலை பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், உதவி காவல் ஆய்வாளர் வனிதா, தலைமை காவலர் கவிதா இணையதள இன்ஸ்டாகிராம் பிரபலங்களான ஆர்த்தி இளமலர் தேவதர்ஷினி உதவி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் முனைவர் அபு.இக்பால், கல்லூரி முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், மருத்துவ படிப்புகள் குறித்தும், சுய ஒழுக்கம் குறித்தும், பல்வேறு கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக கல்லூரியின் நிர்வாக அலுவலர் பூங்காவனம் மற்றும் ஆசிரியர் அபிநயா ஆகியோர் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.