தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 09 –
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் நிறுவனர் றிங்கல்தோபே பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் நிறுவனர் றிங்கல்தோபே பிறந்ததின விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கால்வின் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். தாமரைகுளம் சி.எஸ்.ஐ சேகர ஆயர் கிறிஸ்டோபர் ஆரம்ப ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்து பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளியின் தலைமையாசிரியை அனு ஜெ. பிரீதா விழாவிற்கு முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார். பள்ளி பாடகர் குழுவினர் ஆரம்ப இறை வணக்க பாடலை பாடினர். முதுகலை தமிழ் ஆசிரியை ஆன்லின் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை ஆசிரிய செயலாளர் சாந்தி மார்கிரெட் தொகுத்து வழங்கினார்.
நிறைவில் கணித ஆசிரியை கேத்தரின் விமலா நன்றி கூறினார். இவ்விழாவில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.