திருப்புவனம், ஆக. 09 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் காவலர்கள் தாக்கி உயிரிழந்ததற்கு நிவாரண நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ. 7.5லட்சம் அஜித் குமாரின் தாயார் மாலதியிடம் வழங்கப்பட்டது.
மேலும் அதிமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் அஜித் குமாரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அஜித் குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமாரிடம் வழங்கினர்.