நாகர்கோவில், ஆக. 4
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குமரியில் நேற்று தொடங்கியது. உதவி பொறியாளர், அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலி பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) -க்கான அறிக்கை கடந்த மே 21ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுகள் ஜூன் 25 வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. கணினி வழி தேர்வு இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 7 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி, வெள்ளமோடி உதயா பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, ஆத்தூர் மரியா கல்லூரி, கன்னியாகுமரி லார்ட் ஜெகநாத் பொறியியல் கல்லூரி உட்பட தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது ஒரு நியாண்டிற்கு சராசரியாக 618 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலி பணியிடங்களின் எண்ணிக்கை அரசுத்துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.