போகலூர், ஆக. 3 –
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்காகவும் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது. அவரை வரவேற்கும் போது நினைவு பரிசாக 10 கிராம் தங்கம் முலாம் பூசப்பட்ட ஒன்றரை அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருக பெருமானை நினைவு பரிசாகவும் அதற்கு முன்பாக பட்டு வேஷ்டி பட்டுக்கம்பளம் போர்த்தி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் கவுரவம் செய்து சபதம் ஏற்றார்.
நினைவு பரிசு வழங்கிய போது இந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள் ஆசியுடன் நீங்கள் 2026 இல் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பது நிச்சயம் காலத்தின் கட்டாயம் எனக் கூறினார் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன். மேலும் அரண்மனையில் பழனிச்சாமி பரப்புரை பேச இருக்கும் போது அங்கே சுமார் 7000 திற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் 2000 பேர் சூழ்ந்து வரவேற்றனர். அவர் அரண்மனையில் பேசி முடித்தவுடன் சேதுபதி சீமைக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சருக்கு சுமார் ஐந்து அடி உயரமுள்ள வீர வெண்கல வால் வழங்கப்பட்டது. அந்த வாலை பெற்றுக் கொண்டு ஆர்.ஜி. மருது பாண்டியன் கையை இறுக்கி அணைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் எடப்பாடி கே பழனிச்சாமி.
மேலும் அவர் அரண்மனை வழியாக பேச வரும் பொழுது பாரதி நகர் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாரதி நகர் முதல் வழித்தடம் முழுவதும் சரியாக இருக்கிறதா என்று இளைஞர் போர்படை தளபதிகளுடன் ஆய்வு செய்து அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஆர்.ஜி. மருதுபாண்டியன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர வைக்கும் வரை ஓயாமல் பணியாற்ற வேண்டும்.
இளைஞர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக பெண்கள் தமிழ்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு எடப்பாடி கரத்தை வலுப்படுத்த வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் யாரை வேட்பாளர்களை அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற செய்து அந்த வெற்றிக்கனியை எடப்பாடி கே பழனிச்சாமி காலடியில் சமர்ப்பிக்க சூளுரை ஏற்போம் என்று உறுதி ஏற்றனர்.