அனுப்பர்பாளையம், ஆகஸ்ட் 01 –
திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் மண்டலம்-1, வார்டு-11, 12, 14, வேலம்பாளையம் பகுதியில் உள்ள கரிய காளியம்மன் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் 1-வது மண்டல தலைவர் திருமதி வெ. உமா மகேஸ்வரி, சுந்தரராஜன், உதவி ஆணையாளர் கணேஷ் குமார், திமுக மாநகர செயலாளர் தங்கராஜ், வடக்கு தொகுதி பொறுப்பாளர் குமணன், பகுதி செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் மணி, மாநில மகளிர் பிரச்சார அணி செயலாளர் உமா மகேஸ்வரி, மாநகரத் துணைச் செயலாளர் ராமசாமி, தேவி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன், மாமன்ற உறுப்பினர்கள் அனுசுயா தேவி சண்முக சுந்தரம், இளம் பொறியாளர்கள் பிரபாகரன், கணேஷ்செந்தில், சிவக்குமார், மோகன்ராஜ், அக்கீம், சுகாதார ஆய்வாளர் கோகுல் நாதன், சுகாதார அலுவலர் பரமசிவம், திமுக வார்டு செயலாளர் செந்தில்குமார், சண்முகசுந்தரம், அய்யம்பெருமாள்,
மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.