மதுரை, ஜூலை 31 –
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 ல் உள்ள பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுற்றுலா அரங்கில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.
உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் உள்ளனர்.
மேலும் இந்த முகாம் மூலம் மதுரை மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 30.07.2025 வரை நகரப் பகுதியில் 22 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 43 முகாம்களும் என மொத்தம் 65 முகாம்கள் நடத்தப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 32,055 மனுக்களும், பிற சேவைகளைப் பெற 27,373 மனுக்களும் என மொத்தம் 59,428 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.