By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரம் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரம் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
விழுப்புரம்

விழுப்புரம் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்

Last updated: August 15, 2025 7:23 pm
August 15, 2025
57 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 15 –

விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் அவர்களுடன் திறந்தவெளி ஈப்பு வாகனத்தில் சென்று பார்வையிட்டார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஷ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மனம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் செயிண்ட் பிலோமினாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் இமேஜ் நடனப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 290 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணிக்கான ஆணைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சிறப்பாக பணிபுரிந்த 15 தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகளும், மு விவசாயிகள் 3 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், அதிகட்ச வரி செலுத்திய 2 நிறுவன பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் உயர்கல்விக்கான அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக விழுப்புரம் நகரில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் இ.எஸ். உமா, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ. பத்மஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த. யோகஜோதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

November 8, 2025
46 Views
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account