விழுப்புரம், ஜூலை 30 –
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர்/ஆணையர் திருமதி. ஆர். ஜெயா தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிப்படும் தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிப்படும் தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர்/ஆணையர் ஆர். ஜெயா தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர்/ஆணையர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிப்படும் தரவுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் 7-வது சிறுபாசன கணக்கெடுப்பு, 2-வது நீர்நிலைகள் கணக்கெடுப்பு, முதலாவது பெரிய மற்றும் நடுத்தர பாசன திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் முதலாவது நீரூற்றுகளின் கணக்கெடுப்பு பணிகளை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன் பணிகளை விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வேளாண்மைத் துறையின் சார்பில் பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின்கீழ் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படும் பயிர்கள் GCES (General Crop Estimation Survey) பதிவேற்றம் செய்யும்போது புகைப்படம் தெளிவாக பதிவு செய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் அறுவடை செய்யும் பயிர்களுக்கான மகசூல் விவரங்களை வேளாண்மைத்துறை, புள்ளியியல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய மூன்று துறைகளும் இணைந்து ஒப்புதல் பெற்று துறைக்கு அனுப்பி வைத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுட்டுமல்லாமல் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள், மாவட்ட நல்லாட்சி குறியீடு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலகின் பணிகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது என பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர்/ஆணையர் ஆர்.ஜெயா,தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் இயக்குநர் (வேளாண்மை) த.சீ. பாரதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், புள்ளியியல் துணை இயக்குநர் இரா. லதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், புள்ளியியல் துறை உதவி இயக்குநர் க. கமலகண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.