மதுரை, ஜூலை 29 –
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவருக்கு அபூர்வமான மரபியல் பிரச்சனை இருந்துள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு பயாலஜிக்கல் தெரபி முறையில் இரண்டு ஆண்டுகளாக அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு பரிசோதனையை மேற்கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர் S. நரேந்திரன் இது குறித்து பேசிய போது, “DADA2 என்பது அரிதினும் அரிதான ஒரு மரபியல் கோளாறு ஆகும். அதே வேளையில் இதன் அறிகுறிகள் மற்ற நோய்களின் அறிகுறிகளைப் போலவே தோற்றமளிக்கும். பெரும்பாலும் இப்பிரச்சனை இருப்பவர்கள் ஆண்டுக்கணக்கில் பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பதும் நிகழ்கிறது.
இந்த நோயாளியைப் பொறுத்தவரை எம்.ஆர்.ஐ, ஆஞ்சியோகிராபி சோதனைகளில் கூட அசாதாரணமாக எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் ஏதாவது மரபணுக்கோளாறு காரணமாக இருக்குமோ என்று சந்தேகித்தோம். அந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங் எனும் முறையை மேற்கொண்டோம். DADAZ பிரச்சனைக்கான அறிகுறிகளை அறியும் பரிசோதனை முறை அது தொடக்க நிலையிலேயே மரபியல் பரிசோதனையை மேற்கொண்டதால் துல்லியமான சிகிச்சையளிக்க முடிந்ததுடன் உடல்நிலையில் கூடுதல் சிக்கல்கள் ஏற்படாமலும் தடுக்க முடிந்தது” என்று கூறினார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் செல்வ முத்துக்குமரன், நரம்பியல் சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் விஜய் ஆனந்த், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் செந்தில்குமார், நரம்பியல் சிகிச்சை துறையின் இணை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெபர்லின் சினேகா மற்றும் மருத்துவமனை சார்பில் திலீப் பெர்னார்ட் ஆகியோர் பங்கேற்றனர்.