தருமபுரி, ஜூலை 29 –
தருமபுரியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ரோட்டரி ஹால் திருமண மண்டபத்தில் கட்சியின் நிறுவனர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகத்தில் மூன்றாவது அரசியல் பணி அமைக்க ஆலோசிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும். இளம் விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோருக்கு மருத்துவ செலவிற்காக அரசு மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மத்திய அரசு பணிகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 100% தமிழக இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் அரங்கநாதன், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில இளைஞரணி பார்வையாளர் சுசீந்திரன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.