உசிலம்பட்டி, ஜூலை 28 –
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார் உசிலம்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது உசிலம்பட்டி பகுதியில் விவசாயிகள் பயிரிடும் பொருட்கள் குறித்தும், இதுவரை விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விவசாயிகள் அதிகளவில் பதிவு செய்து அவர்களின் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இ-நாம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கும், விவசாயிகள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஆட்சியருடன் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.