ஈரோடு, ஜூலை 25 –
ஈரோடு மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி வைராபாளையம் வாய்க்காலில் இருந்து தீர்த்தம் எடுத்து தாரை தப்பட்டை உடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதன் அசோகபுரம் விளையாட்டு மாரியம்மனுக்கு புனித மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் பூர்ணிமா ஜெயமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாபா கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.