சங்கரன்கோவில், ஜூலை 25 –
தென்காசி வடக்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாவட்ட செயலாளர் மதன்குமார் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் ரெங்கநாதபுரம் கிராம மக்களுக்கு இடுகாடு, சாலைகள் மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும், வென்றிலிங்கபுரம் கிராம மக்களுக்கு எரிமேடை சாலைகள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பன்னீர் ஊத்து கிராமத்தில் அருந்ததியர் தேவேந்திர குலாலர், பறையர், சமுதாய மக்கள் இடுகாடு செல்ல சாலைகள் வசதி செய்து தர வேண்டும், ஊத்தான்குளம் கிராம மக்களுக்கு எரிமேடை சாலைகள் மற்றும் தண்ணீர் அடிப்படை வசதி செய்து தர வேண்டும், எ. கரிசல்குளம் கிராமம் பொது மக்களுக்கு எரிமேடை சாலைகள், அடிப்படை வசதி செய்து தர வேண்டும், கீழ வயலி கிராமம் பொது மக்களுக்கு எரிமேடை சாலைகள் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் மற்றும் மலையன்குளம், மீன்துள்ளி, குருக்கள்பட்டி சில்லிகுளம், புன்னைவனபேரி, குண்டம்பட்டி மருதன் கிணறு, ஏந்தல்பட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வசதி, சாலைகள் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷாம்னா, நிர்வாகிகள் கிருஷ்ணம்மாள், முனியம்மாள், மகேஷ், தமிழ் முருகன், திராவிடவீரன், மாடசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.