விழுப்புரம், ஜூலை 21 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் தஇ.எஸ். உமா முன்னிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் விழுப்புரம் பெருத்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கு திறந்து வைக்கப்பட்டது.
விழிப்புணர்வு கண்காட்சி அரங்கில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் அமைக்கப்பட்ட 55 விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிராதீர், எச்சரிக்கையாக இருப்பீர், இணைய வழியில் வரும் கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பாதீர், நிதி நிறுவன தொலைபேசி அழைப்புகளுக்கு எச்சரிக்கையுடன் பதிலளியுங்கள், பயம் வேண்டாம் பதட்டம் வேண்டாம், சைபர் உதவி எண் 1930 குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சார்பாக வன்கொடுமை மறையச் செய்வோம் என்பது குறித்தும், சாலை பாதுகாப்பு தொடர்பாக நில் கவனி செல் என்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஒலியங்கள் அடங்கிய விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த ஒருவார காலமாக பெயர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சாலை பாதுகாப்பு போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாகவே இன்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களின் ஆர்வத்தினை பார்க்க முடிந்தது. இந்திகழ்ச்சியினை முன்மாதிரியாக கொண்டு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.
தற்பொழுது நவீன காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றுள்ளதால் ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு எண் போன்ற விவரங்களை தெரிவியுங்கள் போன்ற அழைப்புகள் வரப்பெறும். எனவே, முகம் தெரியாத நபர்களிடமிருந்து வரப்பெறும் அழைப்புகளை தவிர்ப்பது நல்லது. இதுதொடர்பாக மற்றவர்களுக்கும் மாணவர்களாகிய நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஜெ. இயத்மஜா ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ், குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஏ.வி. இளமுருகன், சைபர் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். தினகரன், சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜெகன் உட்பட துறை சார்ந்த அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.