சென்னை, ஜூலை 17 –
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சென்னை சிவானந்தா சாலையில் கட்சியின் தலைவர் தமிழின்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. இதில் முக்கிய உடனடி கோரிக்கைகளான அருந்ததியர் நல வாரியம், தாட்கோ வங்கி நிறுவுதல் அவசியம், 3% சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். கிண்டி ரோஸ்கோர்ஸில் தமிழகத்தை சார்ந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகள் மற்றும் அவ்வீரர்களின் வரலாற்று தகவல்களை கல்வெட்டுகளில் பொறித்து சமத்துவ பூங்காவை அமைத்திட வேண்டும் .
குறிப்பாக மாயபுரம், காந்திநகர் உள்ளிட்ட தலித் பகுதிகளில் மின்விளக்கு, கழிப்பறை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்களுக்கு அச்சுறுத்தி மன உளச்சலை தரும் வகையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளை ( கடை எண்கள் – 3527 , 3583) நிரந்தரமாக மூட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் விடுதலை வேங்கைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வேங்கை தீனாபாய், வடக்கு மண்டல செயலாளர் சம்பூர்ணம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வடிவேல் முருகன், பழனிச்சாமி, வேங்கை ராஜன், வேங்கை நடராசு பாலகிருஷ்ணன் குருசாமி, அங்கப்பன், பொன்னுசாமி கலைமணி, குமுதா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.