கிருஷ்ணகிரி, ஜூலை 16 –
முன்னாள் முதலமைச்சர் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர். சின்னராஜ் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேட்டியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு தேமுதிகவினர் மட்டுமின்றி பள்ளி குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, ரப்பர், பென்சில், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் காமராஜரை பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி உள்ளிட்டவைகளில் சிறப்பாக பேசிய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட செயலாளர் சின்னராஜ் உரையாற்றும்பொழுது: காமராஜரின் எண்ணங்கள் நிறைவேற அனைவரும் அயராது பாடுபட வேண்டும் எனவும் காமராஜரின் எளிமையான வாழ்க்கையையும் நினைவு கூர்ந்தார். மேலும் அவர் கட்டிய கே.ஆர்.பி அணையின் முக்கியத்துவத்தை பள்ளி குழந்தைகளிடம் எடுத்துரைத்தார். காமராஜரை போன்று தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர் வழியை பின்பற்றியவர் எனவும் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய கழக அவைத் தலைவர் ஆர். கோவிந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழகப் பொருளாளர் வி. லட்சுமணன், ஒன்றிய கழக பொருளாளர் ஜீவா, மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அதிரடிபிரபு, நகர அவை தலைவர் எம். சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் Oil சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி. கணக்கன், காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயலாளர் அன்வர்பாஷா, ஒன்றிய அவை தலைவர் சின்னையன், நகர துணை செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், பர்கூர் ஒன்றிய துணை செயலாளர் சின்னசாமி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் LIC சுரேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சின்ன கண்ணன், ஏரிக்கரை கிளைக் கழக செயலாளர் மணிஅரசு, மாவட்ட இணையதள அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகளும், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. கீதா உள்ளிட்ட பொதுமக்களும் பள்ளி ஆசிரியர் பெருமக்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.