கோவை, ஜூலை 16 –
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடார் சங்கம் அறக்கட்டளை காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து +2, +1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 185 மாணவ மாணவிகளுக்கு ரூ.5000, 10000 வீதம் 15 இலட்சம் பரிசு தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை நாடார் சங்க தலைவரும் காமராஜர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் தாளாளருமான ஆர். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிரகலட்சுமி பாஸ்கரன், கவிதா ஆனந்த், ரத்தினமாலா ராஜேஷ்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து காமராஜர் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஹேமா ஸ்டார்லின் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக முத்தூஸ் மருத்துவமனையின் நிறுவனர் முத்து சரவணகுமார் மற்றும் கௌரவ விருந்தினர்களாக கிருபா மருத்துவமனை டென்னிஸ்கோயில் பிள்ளை, தாமரை டிரை புரூட்ஸ் உரிமையாளர் சேர்ம பொன் மற்றும் தொழிலதிபர் பரமானந்தம், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தலைவர் முருகன் ஆகியார் கலந்துகொண்டு 10, +1 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்வில் கோவை நாடார் சங்க பொதுச்செயலாளர் விமலாராகவன், துணைத் தலைவர்கள் சந்தன பால்ராஜ், வாசகன், செயலாளர்கள் பால்ராஜ், சிலுவை முத்துக்குமார், பொருளாளர் ராஜமாணிக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.