சுசீந்திரம், ஜுலை 10 –
ஒன்றிய பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பறக்கையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஆர். குமரேசன், விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ். சொர்ணம் பிள்ளை, கட்டுமான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ற்றி. கோபாலன், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பபிதா, மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். சந்துரு ஆகியோர் தலைமை தாங்கினர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.எஸ். கண்ணன் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி. பெருமாள், ஒன்றிய சிஐடியு கன்வீனர் எஸ்.ற்றி. ராஜ்குமார், வழக்கறிஞர் சிவ கோபன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மிக்கேல் நாயகி, சுப்பிரமணியம், சசி, பவுளி, ஜெபமணி, முத்துக்கிருஷ்ணன் உட்பட 96 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 23 பேர் பெண்கள். இவர்கள் அனைவரையும் பத்திரமாக பறக்கை ஜங்ஷன் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.