கோவை, ஜூலை 10 –
பொள்ளாச்சி வட்டம் கிட்ட சூராம்பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே ஓடிய பழைய பேருந்தை மாற்றி புதிய பேருந்து இந்த வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. புதிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பொன்னாடை அணிவித்து மலர் தூவி பேருந்தை வரவேற்றனர்.
நிகழ்விற்கு கிட்ட சூராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி அவர்கள், துணைத் தலைவர் நஞ்சப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.