தருமபுரி, ஜூலை 10 –
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அதிகாலை முதலே மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுவாமி கரகத்தை எடுத்துக் கொண்டு ஊர் முழுவதும் திருவீதி உலா வந்தனர். .
இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் அம்மனை வழிபட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.