வேலூர், ஜூலை 1 –
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ரயில்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது நடைமேடை 1-ன் வழியாக வந்த வண்டி எண் 18189 டாட்டா நகர் முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயிலில் சோதனை செய்ததில் வண்டியின் பின்புறம் உள்ள பொது ஜன பெட்டியில் பாத்ரூம் அருகில் கேட்பாரற்று இருந்த கருப்பு கலர் சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் அதில் 6 பண்டல்களில் சுமார் 6 kg அடங்கிய கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.
மேலும் இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார் என அந்த அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகளின் செல்போன்கள் மற்றும் அவர்களது பயண சீட்டுகளை வாங்கி பரிசோதனை செய்து பார்த்தனர். சோதனையில் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.
கஞ்சாவை பறிமுதல் செய்து எடுத்து வந்த போலீசார் அதனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்தவர் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.