வேலூர், ஜூலை 01 –
வேலூர் மாவட்டம் புதிய நீதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் புதிய நீதி கட்சியின் சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கைத்தறி காவலன் நகர செயலாளர் எஸ். ரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு, மண்டல செயலாளர் பி. சரவணன், மாவட்ட செயலாளர் ஆர்.பி. செந்தில், தகவல் தொழில்நுட்ப செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் இராம இளங்கோவன் மற்றும் புதிய நீதி கட்சியின் பொறுப்பாளர்கள் வெங்கடேசன், கன்னியப்பன், நத்தம் நாகராஜ், சீனிவாசன், முரளி, ஹரிஷ், இளஞ்செழியன், சரவணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.