ராமநாதபுரம், ஜுன் 30 –
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் மற்றும் மாற்றுக்கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுக கட்சியில் தங்களை இணைத்து கொண்ட நிகழ்ச்சி ராமநாதபுரம் பாரதி நகர் தனியார் மகாலில் நடைபெற்றது.
மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சி ராமநாதபுரம் ஒன்றிய நிர்வாகி வக்கீல் முத்து முருகன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி. ரெத்தினம், மாநில மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிமுருகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் நேதாஜி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் பாப்புலர் கே.ஆர். பன்னீர்செல்வம், டாஸ்மாக் ஆர். ராஜ்குமார் ராம்ஜி, காயாம்பு, கருப்பையா ராதாகிருஷ்ணன் ஆனந்த பிரபு கோபி பிரசாத் இன்ஜின் யுவராஜ் ஹேமலதா அவினாஷ் தங்கவேலு முனியசாமி ராஜா, அசோக், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் ராமநாதன் நன்றி கூறினார்.