மதுரை, ஜூன் 30 –
மதுரை குட் செட் தெருவில் எம்எம்எம் கண் பராமரிப்பு மையம் கண் மருத்துவமனையை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் சர்க்கரை நோயால் கண் பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு பரிசோதனைகளை நவீன ஃபண்டஸ் கேமரா மூலம் முழுமையாக முதன்முறையாக வீட்டுப் பரிசோதனையும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.
மேலும் தூய்மையான இந்திய உற்பத்தி லென்ஸ்களுடன் லேசர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஊசியும் தையலும் இல்லாத குறைந்த செலவிலான கண் பார்வை குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இந்த மருத்துவமனையில் கண் சிகிச்சை மிக எளிதாகவும் குறைவான செலவில் கண் பராமரிப்பை வழங்கும் முன்னோடியான ஒரு முறையை அறிமுகப்படுத்துகிறது. தென் தமிழகத்தில் முதன்முறையாக இந்த மையம் முழுமையாக வீட்டுப் பரிசோதனைகளையும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனைகளையும் நவீன ஃபண்டஸ் கேமராவை வீட்டிற்கே கொண்டு வந்து மேற்கொள்கிறது.
மேலும் சிறந்த தரம் கொண்ட இந்திய உற்பத்தி லென்ஸ்களுடன் அறுவை சிகிச்சை குறைந்த செலவில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புறத்தில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் 82485 64103 என்ற எண்ணை அழைத்து வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மத்திய அரசு சட்ட ஆலோசகர் டாக்டர் பி. ராமசாமி மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லூரி தலைவர் பி. அண்ணாதுரை, தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் கருவிழி சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பெர்னார்ட் ஆல்பர்ட் ராஜ்குமார்,
கண் மருத்துவர் டாக்டர் ஆ. பாக்ய சகாய மெர்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.