கொல்லங்கோடு, ஜூன் 24 –
கொல்லங்கோடு அருகே கோனசேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் (55) பெயின்டர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 7 -ம் தேதி வீட்டருகே உள்ள கால்வாய் கரையோர சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை கொண்டு சேர்த்து, அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமார் இறந்தார். இது சம்பந்தமாக அவரது மனைவி ஸ்டெல்லா பாய் (44) கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் உடற்கூறு ஆய்வில் காயங்கள் காரணமாக ராஜகுமார் இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. விசாரணையில் ராஜகுமாரும் டெம்போ டிரைவர் அனிஷ் (36) என்பவரும் நண்பர்கள். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு அனீஸ், ராஜகுமாரை தாக்கி உள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு கொள்ளாமல் அனீஸ் வீட்டுக்குச் சென்று உள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து நேற்று அனிசை கைது செய்து குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தினர்.