ஈரோடு, ஜூன் 20 –
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் தாளவாடி வட்டாரங்களின் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் உள்ள 9 குக்கிராமங்களை இணைக்கும் சாலைப்பணிகளுக்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் அணைப்போடு வனச்சாலை ரூ.1.09 கோடி மதிப்பீட்டிலும் தம்முரெட்டி வனச்சாலை ரூ.13.96 இலட்சம் மதிப்பீட்டிலும் ஒன்னக்கரை வனச்சாலை ரூ.19.10 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் தாளக்கரை சாலை வரை ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் திம்பம் தாளவாடி சாலை முதல் மாவநத்தம் சாலை வரை ரூ.81.96 இலட்சம் மதிப்பீட்டிலும் திம்பம் தாளவாடி சாலை முதல் காளிதிம்பம் சாலை வரை ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலும் திம்பம் தாளவாடி சாலை முதல் ராமரணை சாலை வரை ரூ.51.45 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் குதியாலத்தூர் ஊராட்சியில் கடம்பூர் மாக்கம்பாளையம் சாலையில் உள்ள குதியாலத்தூர் பள்ளம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் கடம்பூர் மாக்கம்பாளையம் சாலையில் உள்ள சக்கரைப்பள்ளம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் பவளக்குட்டை சாலை முதல் கரளையம் சாலை பணிகளும் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.60.94 இலட்சம் மதிப்பீட்டில் டி.பி தொட்டி சிக்கனந்தி தம்படிகுட்டை சாலை ரூ.24.27 இலட்சம் மதிப்பீட்டில் கொங்கள்ளி சாலை முதல் பசப்பன்தொட்டி சாலை ரூ.47.18 இலட்சம் மதிப்பீட்டில் பாரதிபுரம் முதல் நரிக்குறவர் காலனி வரை சாலை பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கொல்லேகால் ஆசனூர் கொட்டாடை முதல் அட்டப்பாடி வரை சாலை ரூ.70.11 இலட்சம் மதிப்பீட்டில், கொட்டாடை முதல் ஜோகிதொட்டி வரை சாலை ரூ.16.47 இலட்சம் மதிப்பீட்டில், கொல்லேகால் கொட்டாடை முதன்மை சாலை முதல் ஓடமந்தை வரை சாலை ரூ.3.88 கோடி மதிப்பீட்டில், பெஜலட்டி முதல் இட்டரை வரை சாலை ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் கெட்டவாடி பனஹள்ளி முதல் ஜூரகள்ளி சாலை ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் வைத்தியநாதபுரம் முதல் கோட்டமாளம் சாலை ரூ.95.32 இலட்சம் மதிப்பீட்டில் தலமலை தாளவாடி சாலை முதல் சின்சின் குட்டை வரை சாலை, ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் ஜே.ஆர்.எஸ்.புரம் முதல் கோட்டமாளம் சாரை வழி தாளுத்தி கே.பி.மாளம் வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.11.71 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை
கொங்காடை சாலை முதல் பறையூர் ஒசூர் முதல் வனம் சாலை, ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை முதல் கொங்காடை வரை (மணியாச்சி பள்ளம் பாலம் வழியாக) சாலை, ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் துருசனாம்பாளையம் முதல் சோளகனை வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை சாலை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் விலாங்கோம்பை வனச்சாலை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. இதன் மூலம் மலைவாழ் மக்கள் அவசர சிகிச்சைக்காக குறித்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ வசதிகள் பெறவும் மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரி சென்றடையும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் வனச்சாலைகள் அமைக்கும் பணிகள் 33.184 கி.மீ நீளத்திற்கு முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 16.806 கி.மீ நீளத்திற்கு சாலைப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்தியூர் மற்றும் தாளவாடியில் 6.050 கிமீ நீளத்திற்கு சாலைப் பணிகள் மேற்கொள்ள அரசிற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.