சிவகங்கை:ஜூன்:05
சிவகங்கையில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது . இந்தக் கல்லூரியில் மாணவ , மாணவிகள் சேர்க்கைக்காக இம்மாதம் ஜூன் 2 -ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது . இந்த கவுன்சிலிங் உறுப்பினர்களில் கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரி அளவில் சீனியர் துறைத் தலைவர்கள் இருப்பது நடைமுறை வழக்கம் . இந்த நடைமுறைகளை ,மற்றும் விதிகளை புறந்தள்ளிவிட்டு .
மிக மூத்த துறைத் தலைவர்கள் இருக்கும் போது ஒரு தலைபட்சமாக ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி கவுன்சிலிங் நடத்துவது என்பது ஏற்கத்தக்கது அல்ல… என்றும் , கல்லூரியின் அட்மிஷனில் சமநிலை பின்பற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் சிவகங்கையில் செயல்படும் மேதகு ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகம் தனது கசப்பான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது . சாதி ,மதங்களை கடந்து போக வேண்டும் என்றும் சொல்லும் கல்வித் துறையில் இது போன்ற செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது . இந்த கவுன்சிலிங் உறுப்பினர்களில் இதே கல்லூரியில் ஒருவர் மீது சாதிய குற்றச்சாட்டு புகார்களும் நிலுவையில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது . இது போன்ற புதிய , புதிய பிரச்சினைகள் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் சமீப காலமாக தொடர்ந்து எழுந்த வண்ணமே உள்ளது . எனவே குற்றச்சாட்டுகளுக்கு உடந்தையாக இருந்து வரும் இந்தக் கல்லூரியின் முதல்வரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் . மேலும் இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை கண்காணித்து திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வரும் , மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் இப்போது எதிர்பார்க்கிறார்கள் .