By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரி

குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

Last updated: May 31, 2025 2:03 pm
May 31, 2025
201 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 29,

கன்னியாகுமரி மாவட்டம், திரிவேணி சங்கமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் குமரி கலை விழாவினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி தலைமையில் நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசுகையில்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் ஐந்து நாள் குமரி கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழா குமரி கலை விழா என்ற பெயரில் நடக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து நாட்கள் இந்த கலை நிகழ்ச்சியை பார்வையிட வாய்ப்பு கிடைத்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவது சுற்றுலா குறித்து அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி ஆகும். முக்கடலும் சங்கமிக்கும் இடமாகும். அய்யன் திருவள்ளுவர் சிலையை கலைஞர் உருவாக்கியதாகும். விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவை நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களின் மண்டபங்களாகும். வருடத்திற்கு ஒன்றரை கோடி பேரை ஈர்க்கும் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் 133 அடி உயரத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் வரலாற்று சிறப்பு மிக்க கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து, கடந்த 30.12.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

கண்ணாடி இழை தரைத்தள பாலம் திறந்து வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிக்கின்றனர்.

நமது மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள், மலைகள், நீர்நிலைகள், அணைகள் ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கதாகும். நமது மாவட்டத்தில் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். சுற்றுலா தளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமை ஆகும். சுற்றுலா தளங்களாக முட்டம், திற்பரப்பு, சித்தார். மாத்தூர் தொட்டி பாலம் போன்ற சுற்றுலா பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

குமரி கலை விழா நிகழ்ச்சி நடை பெறுவதன்மூலம் பாராம்பரிய கலைகளுக்கும். நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க முடியும். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை கண்டுகளிப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். பொதுமக்கள் அனைவரும் இந்த கலை விழாவிற்கு திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள், இசை கலைஞர்கள், பரதநாட்டிய குழுவினர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மேளதாள குழுவினர் உள்ளிட்டோர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் பாடல்கள், ஆடல் பாடலுடன் குமரி கலைவிழா முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர்
என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன். துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல். நகர்மன்ற உறுப்பினர் ஆட்லின், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், தாமரை பாரதி, பாபு, பூதலிங்கம், துறை அலுவலர்கள், கலைஞர்கள். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
இடையூறு ஏற்படுத்தும் கல்குவாரியை இடமாற்றம்
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

July 31, 2026
41 Views
20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா
மதுரை சோழவந்தான் அருகே தேனூரில் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி
குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account