உத்தமபாளையம் மே 29
சின்னமனூர் அருகே உத்தமபாளையம் சாலையில் கோவையில் இருந்து வேகமாகச் சென்ற கார் ஒன்று தென்னை மரத்தில் மோதி தாய் மகன் இருவர் சம்பவ இடத்தில் பலியானார்கள், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்படி கார்
உத்தம பாளைத்தில் குடியிருப்பவர் வெள்ளைபாண்டி இவர் தற்போது மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து
வருகிறார்.
இந்நிலையில் இவரது மனைவி ஜெயா (50),மகன் கவுதம் (25),மகள் அபர்ணா, அக்கா தனலட்சுமி, அக்காவின் மகன் அருண் ஆகியோர் காரில் இருந்தனர்.
மகள் அபர்ணா உடல்நிலை சரியில்லாததால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடித்து அதிகாலையில் சேலத்தில் இருந்து உத்தமபாளையத்திற்கு புறப்பட்டுவந்தனர். காரை அருண் ஓட்டி வந்துள்ளார்.
கார்
சின்னமனூரை கடந்து உத்தமபாளையம் நோக்கி சென்ற போது துர்க்கை அம்மன் கோயில் அருகே திடீரென முன் டயர் வெடித்தால் வேகத்தில் நிலை தடுமாறி அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதி இன்னொரு வாகனத்தில் இடித்து விழுந்து வயலில் உருண்டு பள்ளத்தில் கவிழ்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயாவும் அவரின் மகன் கௌதமும் பலியானார்கள்.
இது குறித்து சின்னமனூர் காவல் நிலையத்திற்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அருண், அவருடைய தாய் தனலட்சுமி, ஜெயா மகள் அபர்ணா ஆகியோரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த
விபத்து குறித்து
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.