கிருஷ்ணகிரி மே 28:
கிருஷ்ணகிரிக்கு வருகின்ற ஜூன் 5ஆம் தேதி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.சீனிவாசன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தர இருக்கும் தேமுதிக கழக பொருளாளர் L.K.சுதீஷ் வரவேற்கும் விதமாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.முருகன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக அவைத் தலைவர் எல்.முருகன், வி.லட்சுமணன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கழக பொருளாளரை வரவேற்பது குறித்தும், திருமண விழா நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விவாதிக்கப்பட்டது. அனைத்து ஒன்றியங்களின் சார்பில் வாகனங்களை ஏற்பாடு செய்வது, நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. சிறப்பாக நடைபெற்ற இந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக கிழக்கு மாவட்டத்திலுள்ள, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, கிருஷ்ணகிரி நகர செயலாளர் ஆர். ரவி, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், மத்தூர் ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் அப்பாவுபிள்ளை, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.வேலு, பலராமன், சதீஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கனகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், கிருஷ்ணகிரி ஒன்றிய அவை தலைவர் பார்க்கோவிந்தன், பகுத்தன்சுரேஷ், நகரஅவைத்த தலைவர் எம்.சங்கர், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பர்கூர் ஒன்றிய அவைத் தலைவர் பழனி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர்கள் ராஜாமணி, லோகிதாசன், மத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாதேஷ், நெசவாளர் அணி செயலாளர் சிவாஜி, மாது, மணியரசன், எம்.இளவரசன், உள்ளிட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல் நன்றி உரையாற்றினார். மேலும் வருகின்ற ஜுன் 5ம் தேதி காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க மாவட்ட கழக செயலாளர் அனைவரருக்கும் அழைப்பு விடுத்தார்.



