ஊத்தங்கரை மே 25
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் பாப்பாத்தி என்பவர்களின் மகள் பத்மஸ்ரீ (வயது 6 ) என்ற மாணவி உடன்,
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கமல் ராஜ் பாரதியின் மகன் மற்றும் மகள் ஆகியோர் கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு விடுமுறையை கழிக்க வந்துள்ளனர். மேக்னேஷ்வரன் ( வயது 8) மற்றும் திரிச்சிகா (வயது 9),
மூன்று பேரும் ரெட்டிபட்டி ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் நீரில் மூழ்கிய பத்மஸ்ரீயும் மேக்னீஸ்வரனும் பலியாகி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக திரிச்சிகா உயிர் தப்பினார் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நீரில் மூழ்கிய இரண்டு குழந்தை சடலங்களையும் மீட்டு ஊத்தங்கரை காவல்துறையினர் இரண்டு சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


