பரமக்குடி ,மே.30: முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்யும் விவசாய நிலங்களை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்.
மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் நயினார்கோவில் பகுதிகளில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாய முறைகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் பெற்று புதிய தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கத்துடன் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர். .அதன் படி நயினார்கோவில் கிராமத்தில் வேளாண் செயல்முறைகளை வேளாண் கல்லூரி மாணவி இந்துஜா வல்லம் என்னும் கிராமத்தில் பாஸ்கரன் என்ற விவசாயி முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் மூலம் தனது பயிர்களுக்கு மேற்கொண்டதை அறிந்து அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த விவசாயி மாணவிகளுக்கு கூறுகையில் ” இத்திட்டத்தின் குறிக்கோள் பாசனத்திற்கு நீர் இறைக்க விவசாயிகளின் மின்சாரத் தேவையை உறுதி செய்கிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு- MNRE நிதியாக 30 சதவீதமும், மாநில நிதியாக 40 சதவீதம் என 70% மானியம் வழங்கப்படுகிறது.மேலும், எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என கூறினார் .திட்டப் பகுதி அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர), படைப்புகளின் விவரங்கள் பாசன நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு மானிய உதவியுடன் ஆஃப்-கிரிட் தனித்த சோலார் பம்பிங் சிஸ்டத்தை வழங்குகிறது என கூறினார்.
அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் குழு அதிகாரியை அணுகி திட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.இத்திட்டத்தைப் பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவி இந்துஜா விளக்கம் அளித்து வருகிறார்.
பட விளக்கம்
சூரிய சக்தியின் மூலம் பாசனம் செய்யும் நயினார்கோவில் விவசாயி பாஸ்கரன் உடன் வேளாண் கல்லூரி மாணவி இந்துஜா.