ஆடுதுறை மே 17
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கைவின் குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய களப்பணியாளர்களுக்கான அங்கக வேளாண்மை அறிமுக பயிற்சி ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவன உள்ளரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வேளாண் விரிவாக்கத்துறை பேராசிரியர் முனைவர்.அருணாச்சலம் முன்னிலை வகித்தார். ஸ்கைவின் குழும நிறுவனங்களின் தலைவர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மண் வளம் காக்க, அங்கக வேளாண்மையில் அதிக மகசூல் பெற தேவையாக இருக்கும் இடுபொருட்களை இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கடல் தாவர சிகப்புபாசி மூலம் தயாரித்து நாடு முழுவதும் வழங்குவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஸ்கைவின் நிறுவனம் செய்து வரும் பணிகள் குறித்தும், களப்பணியாளர்களுக்கான அங்கக வேளாண்மை அறிமுக பயிற்சி குறித்தும் நோக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்.சுப்ரமணியன் இந்திய உணவு உற்பத்தி, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், உயிர் உரங்களின் பயன்பாடு, இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து விளக்கி தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சிகள் துறை இணை பேராசிரியை முனைவர்.ஆனந்தி நெற்பயிரை தாக்கக்கூடிய பூச்சிகள், உயிரியல் முறை கட்டுப்பாடு, பூச்சி முன்னறிவிப்பு மற்றும் இயற்கை சார்ந்த முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.
பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியை முனைவர்.அகிலாதேவி நெற்பயிரில் வரக்கூடிய நோய்கள் மற்றும் குறைபாடு, அங்கக முறையில் கட்டுப்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தார்.
மண்ணியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.முத்துக்குமாரராஜா மண் மாதிரி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், உரக்குறைபாடு மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியை முனைவர்.சிவசங்கரிதேவி உயிர் உரங்கள் மற்றும் பொட்டாஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பாக்டீரியா, உரங்களின் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
கோயம்புத்தூர் வேளாண் காலநிலை அறிவியல் மையத்தின் பேராசிரியரும் துறைத்தலைவருமான முனைவர்.சத்தியமூர்த்தி வேளாண் காலநிலையும், பயிரும் மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். கோயம்புத்தூர் வேளாண் காலநிலை அறிவியல் மையத்தின் இணை பேராசிரியர் முனைவர்.தீபாகரன் பருவநிலை மாற்றத்திற்கேற்ப பயிர் சாகுபடி முறை மற்றும் யுத்திகள் குறித்து விளக்கினார்.
பயிர் இனப்பெருக்கத்துறை இணை பேராசிரியர் முனைவர்.தண்டபாணி பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பயற்சியில் பங்கேற்ற களப்ணியாளர்களுக்கு நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. உழவியல்துறை இணை பேராசிரியர் முனைவர்.இளமதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஸ்கைவின் நிறுவனங்களின் பொது மேலாளர் இராமலிங்கம் நன்றி கூறினார்.