சோழவந்தான் மே 16
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்து டிஎன் 58
என்2445 என்ற எண் கொண்ட சோழவந்தான் பனிமனை கிளையில் உள்ள பேருந்து பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பேருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பேருந்தும் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பயணிகளுடன் செல்லும் போது திடீரென பழுதாகி சாலை நடுவே நின்று விட்டாதாக சொல்லப்படுகிறது.
இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதே போல் நேற்றும் இந்த பேருந்து திடீரென பழுதாகி நின்று விட்டது இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
திருமங்கலம் செல்லும் இந்தப் பேருந்து சோழவந்தான் பணிமனையில் இருந்து காலை 6:30, 9:00, 11:30, மாலை 2:30, 5:00, 7:30 மணி என பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் கூட்ட நெரிசலான நேரங்களில் இயக்கப்படுகிறது..இந்த பேருந்து மேடான பகுதிகளில் செல்வதற்கு மிகவும் திணறுகிறது..
பின்புறம் செல்வதற்கான கியர் இயக்கும் போது ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இருக்கும் இந்த பேருந்துக்கு பதில் முன்பு இருந்த பேருந்தே மேலானது என பயணம் செய்யும் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலத்தில் இருந்து வரும் பொழுது செக்கானூரணி தேவர் சிலை அருகில் இதே பேருந்து பழுதாகி நின்றுள்ளது.
ஆகையால் சோழவந்தான் பணிமனை நிர்வாகத்தினர் திருமங்கலம் வழித்தடத்தில் இயங்கும் 999 என் கொண்ட வழித்தட பேருந்தை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கவும் அல்லது மாற்று பேருந்தை அந்த வழித்தடத்திற்கு வழங்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.