தஞ்சாவூர். மே.15
தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை சபையர் மகாலில் தஞ்சாவூர் பார் அசோசியேஷன் அலுவலக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கள் சார்பில் முன்னாள் மூத்த வழக்கறிஞரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். சிங்கரவடிவேல், உருவப்படத் திறப்பு விழா.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். சுரேஷ்குமார் தலைமை வகித்து உருவப் படத்தினை திறந்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) எஸ். ராஜேஸ்வரன்,மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் அட்வகேட் ஜெனரலும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ. நவநீத கிருஷ்ணன்,
சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாட்டின் கூடுதல் அட்வகேட் ஜெனரல்.கே. சந்திர மோகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர்
வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் ஆர்.திராவிடச்செல்வன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி,
கே.பூரண ஜெய ஆனந்த், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்
எம்.ஆர்.ஆர். சிவசுப்ரமணியன் தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் எம்.எஸ். ஆனந்த்
எஸ் ராஜேந்திரன் ஆர்.ராஜமோகன் ஜி.அன்பரசன்,பி.ஆர். ராஜேந்திரன்
டி.காமராஜ்,என்.சதாசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.அருண்குமார்
நன்றியுரையாற்றினார்.