உசிலம்பட்டி மே 15
மதுரை, உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாய முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கோரிக்கை மனுக்களை மதுரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் 14/05/25 முதல் வரும் 22 ஆம் தேதி வரை ஜமபந்தி எனும் வருவாய் தீர்ப்பாய முகாம் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் கருமாத்தூர் உள் வட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்களும், வாலாந்தூர், 16 ஆம் தேதி சிந்துபட்டி, 20 ஆம் தேதி உத்தப்பநாயக்கனூர், 22 ஆம் தேதி உசிலம்பட்டி உள் வட்ட அளவிலான கிராம மக்கள் நேரில் வந்து மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் ஆய்வு செய்து விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் மேலும் இந்த அறிய வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வருவாய் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.