நீலகிரி. மே. 14
முதுமலை யானைகள் முகாமை நேரில் வந்து பார்வையிட்டு யானை பாகன்களுக்கு மற்றும் காவடிகளுக்கு என ஐந்து கோடி மதிப்பில் 44 வீடுகளை பிரத்தியேகமாக கட்டிக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு அனைத்து யானை பாகங்களும் நன்றி தெரிவித்துள்ளனர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உதவிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் இன்று முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமை நேரில் வந்து பார்வையிட்டார்.
அப்போது யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை பார்வையிட்ட அவர் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்தார் அதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற அந்த எலிபன்ட் விஸ்பரஸ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் வெள்ளி உள்ளிட்ட ஐந்து மூத்த பாகங்களுக்கு பரிசு தொகையும் வழங்கினார் வளர்ப்பு யானைகளை பராமரித்து வரும் யானை பாகங்கள் மற்றும் காவடிகளுக்கு ரூபாய் 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மவுத் கிராமத்தை திறந்து வைத்தார் அப்போது மாரி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புக்கான சாவியை வழங்கினார்
தமிழக முதல்வர் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு நேரடியாக வந்து தங்களை பார்த்து மட்டும் இன்றே தங்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர் ஆஸ்கர் விருது பெற்ற எலிபன்ட் விஸ்பரஸ் ஆவண குறும்படத்தில் நடித்த கொம்பன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதேபோல் எலிபன்ட் விஸ்வர சாவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தபோது தமிழக முதலமைச்சர் யானை பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்அதன்படி கடந்த ஓராண்டு காலத்தில் குடியிருப்புகளை நேரில் வந்து திறந்து வைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்து இருப்பதாக அங்குள்ள பழங்குடி மக்கள் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் தமிழக அரசு கொறடா கா. ராமச்சந்திரன் தமிழக அமைச்சர் சாமிநாதன், தமிழக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட வனத்துறை அதிகாரி கௌதம், முதுமலை புலிகள், காப்பக இயக்குனர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் மே 15ஆம் தேதியான இன்று உலக பிரசித்தி பெற்ற ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் 127 வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்.
உதகை மலர்கண்காட்சியை காண மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளன. உதகை மலர்கண்காட்சியில் வெளிநாட்டு மலர்கள் உட்பட பல்வேறு மலர்கள் அலங்காரபடுத்தபட்டுள்ன. பல்வேறு அரங்குகளில் மர்கள் காட்சிபடுத்தபட்டுள்ன. மேலும் மலர்களால் தயார்படுத்தபட்டுள்ள அலங்கார வடிவங்கள் பலரின் கவணத்தை ஈர்த்து வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.