திண்டுக்கல் மே. 13
திண்டுக்கல் மாவட்டம், நி.பஞ்சம்பட்டியில் ஹாக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி நிகழ்ச்சி நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் 12 அணிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஹாக்கி ஒலிம்பிக் வீரர் இந்திய அணி கேப்டன் ஆடம் அந்தோணி சிங்கிலர் கலந்து கொண்டார்.
இதில் மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி இறுதி போட்டியில் முதல் இடத்தை பிடித்த சென்னை பட்டாபிராம் அணிக்கு ரூபாய் 20000 ரொக்கப் பரிசும், சூழற்கோப்பையும் , இரண்டாம் இடம் பிடித்த சென்னை ஜோஜா அணிக்கு ரூபாய் 15,000 ரொக்கப் பரிசும், சுழற்கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த மதுரை தெற்கு மண்டல போலீஸ் அணியினருக்கு ரூபாய் 10000 ரொக்கப் பரிசும், சூழற்கோப்பையும், நான்காம் இடம் பிடித்த மதுரை திருநகர் ஹாக்கி கிளப் அணிக்கு ரூபாய் 7000 ரொக்க பரிசும், சூழற்கோப்பையை திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை Dr.N.M.B.காஜாமைதீன் , துணைத் தலைவர்கள் ரமேஷ் பட்டேல், சுவாமிநாதன், Dr.S.M.அமிர்தகடேஸ்வரர், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் அஸ்வின், முருகன், ராஜேஸ்வரி ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நி.பஞ்சம்பட்டி ஹாக்கி சங்க நிர்வாகிகள் குணா, பிரவீன் ,வின்ஸ்டன் பாபு, முத்துவீரன், ஆகியோர்கள் சிறப்பாக ஹாக்கி போட்டியை ஒருங்கிணைத்தார்கள். மாநில ஹாக்கி போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.