கோவில்பட்டி மே. 13
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், கழுகுமலை அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது, இதில் ஊர் பொதுமக்களின் அழைப்பினை ஏற்று திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் அம்மன் ஆலயத்தில் கோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை தொடங்கி வைத்தார், ஊர் பொதுமக்கள் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி சுப்புராஜ், ஊர் நாட்டாமைகள் பன்னீர் செல்வம், செல்லகாளை ஆகியோர் தலைமை வகித்தனர், திமுக வார்டு கவுன்சிலர் பெருமாள்சாமி, கரடிகுளம் தொழிலதிபர் ராஜா, ராஜாபுது குடியைச் சேர்ந்த பால்ராஜ்,சதீஷ்குமார், மற்றும் சுற்று வட்டார ஊர் பெரியவர்கள்,பெண்கள், இளைஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.