நாகர்கோவில் மே 13
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம், அனந்தன்நகர் பகுதியை சேர்ந்த மாணவன் (மாற்று திறனாளி) ஜெபின் தாமஸ், சிறப்பு ஒலிம்பிக் சைக்கிள் தகுதி போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.
மேலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்க முயற்சித்து யாரும் உதவ முன்வராத நிலையில். இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன் நேற்று அந்த மாணவனுக்கு சிறப்பு மிதிவண்டியை அனந்தநாகார் குடியிருப்பில் அமைந்துள்ள சாந்தி நிலையத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும் அவர் கூறும்போது மாணவன் சிறப்பாக பயிற்சிகள் செய்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று நமது மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும், நமது தேசத்திற்கும் பெருமைசேர்க வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சாந்தி நிலைய முதல்வர் ஜான்சி தாமஸ், வடிவை சத்யராஜ், கிழக்கு மாவட்டபொறியாளர் துணை அமைப்பாளர் அ.சங்கர், அண்ணா விளையாட்டு அரங்க நலச்சங்க செயலாளர் ஜெயின் ஷாஜி, வழக்கறிஞர்கள் முருகன், சிவ கோடீஸ்வரன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் நாராயண பெருமாள், வட்டக் கழகச் செயலாளர் ரஞ்சன்,விமல் ராஜேஷ் ,முன்னாள் வட்டக் கழகச் செயலாளர் வடக்கு கோணம் ராஜன், அசோகன் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.