தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த மே 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் திருநாளில் நேற்று முன் தினம் காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, வருவாய் கோட்டாட்சியர் கவிதா ,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், தென்காசி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, பாஜக மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வர பெருமாள், நகர தலைவர் உதயகுமார், முன்னாள் நகர தலைவர் கணேசன், முன்னாள் பொதுச் செயலாளர் மணிகண்டன், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் சுப்பையா பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வராஜ், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, அதிமுக அணி நிர்வாகிகள் பிஜிபி ராமநாதன், செளந்தர், தீக்கனல் லட்சுமணன், ராமசுப்பிரமணியன், முத்து மணிகண்டன், வெள்ளத்துரை, நானா (எ) சங்கர நாராயணன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமதுரை, மாரிச்சாமி, ராஜேஸ்வரி இசக்கியப்பன், ராஜேஸ்வரி கந்தன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சரவணன், இந்து முன்னணி கோட்டச் செயலாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், டாக்டர் விஜயலட்சுமி, செங்குந்தர் அபிவிருத்தி சங்கச் செயலாளர் மாரிமுத்து, கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, ஒய்வு பெற்ற வட்டாட்சியர் சந்தானம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics