சேலம் மாவட்டம் எடப்பாடி ஆவணி பேரூர் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்த பச்சி யம்மாள் ஆறுமுகம் ஆகியோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது. எனது தந்தை மாரிமுத்துவிற்கு சொந்தமான 1.97 சென்ட் நிலம் உள்ளது. எனது தந்தை கடந்த 2005 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். எனது தந்தை பெயரில் உள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்து கொள்ள சேலம் சங்ககிரி நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.இந்நிலையில் மேற்படி ஆறுமுகம்,அண்ணாமலை, சாந்தி, மாரியம்மாள், சுப்பிரமணி ஆகியோர்கள் தங்களுக்கு உண்டான பாகத்தை வேறு நபருக்கு விற்று விட்டார்கள். இந்நிலையில் எனக்கும் சுந்தரம், கோபாலகிருஷ்ணன், ஆகியோர்களுக்கு மட்டும் மேற்படி சொத்தில் பாகம் இருந்து வருகிறது. இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தங்களுக்கு உண்டான பாகத்தை விற்ற பின்னும் எங்களை தொந்தரவு செய்து வருகிறார்கள் மேலும் எனக்கு பாத்தியப்பட்ட நிலத்திற்குள் அத்துமீறி அடியாட்களுடன் நுழைந்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பனைமரம் உட்பட பலவரை மரங்களை வெட்டியும் அதை தடுக்கச் சென்ற எங்களை கெட்டை வார்த்தைகளில் அசிங்கமாக திட்டியும் பிரச்சனை செய்ததால் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டிய சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம் ஆகியோர்கள் மீதும் மேற்படி சட்ட விரோதமாக மரத்தை வெட்டி எடுத்துச் செல்ல உதவியாக இருந்த கே.பி.எம்.சண்முகம், மாரியப்பன், மர வியாபாரி மதி,லாரி ஓட்டுநர் கார்த்திக், மற்றும் சுமார் 20 அடி ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics