By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி நிறைவு
தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி நிறைவு

Last updated: May 9, 2025 4:37 pm
May 9, 2025
25 Views
Share
SHARE

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் – 3-ல் பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக ஆழப்படுத்தும் பணி 26 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கையாளும் திறனை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையத்தின் மூலம் இயக்கப்படும் வடக்கு சரக்கு தளம் -3, தற்போது இடைக்கால வர்த்தக செயல்பாடுகளைத் துவங்குவதற்கு தயாராக உள்ளது. இந்த முனையத்தில் அமைந்துள்ள இரண்டு 120 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ஜிப்சம், ராக் பாஸ்பேட் மற்றும் தாமிர தாது போன்ற பொது சரக்குகளைக் கையாள முடியும்.வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் -3, 306 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டுள்ளது. இச்சரக்குதளம் 260 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும் மற்றும் 95,000 னுறுவு கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடக்கு சரக்கு தளம் 3-ஐ முழுமையாக இயந்திரமயமாக்குவதற்கான சலுகை ஒப்பந்தமானது வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கும்,. JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையத்திற்கும் இடையே கையெழுத்தானது. இச்சலுகை ஒப்பந்தத்தின்படி 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் இயந்திரமயமாக்கல் பணியானது முடிவடையும் தருவாயில் இத்தளத்தில் வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும்.
வடக்கு சரக்கு தளம் – 3-ல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பனமேக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3 ஆழப்படுத்தும் பணியானது 05.04.2025 அன்று துவக்கப்பட்டு 26 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையினை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தும் பணி வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும் பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக கப்பல்கள் துறைமுகத்திற்குள் வரும் நுழைவு வாயிலினை 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் நிலக்கரி தளத்தில் 80,000 னுறுவு டன்கள் திறன் கொண்ட 230 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட இத்தளத்தில், கப்பல் இல்லாத சமயத்தில் இணைப்பு கன்வேயர் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1500 டன் மொத்த சரக்குகளை வெளியேற்றுவதற்கு வசதியாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கன்வேயர் மற்றும் துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கிடன் இணைக்கப்பட்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில், பொது சரக்குகளைக் கையாளுவதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம்-3ல், பொது சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்தவும், விரைவில் இயந்திர மயமாக்கப்படவிருக்கும் இத்தளத்தின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் அவர் மொத்த சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்தி கடல்சார் வர்த்தகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த சிறப்பான வசதியைப் பயன்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களையும் மற்றும் வர்த்தக கூட்டாளர்களையும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் கூட்டத்திற்குள் அதிக அளவில் பாய்ந்த மாட்டு வண்டிகள்
கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு
விளாத்திகுளம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகள் இடிப்பு

April 9, 2026
11 Views
ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்
திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account