தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாராயணசாமி
கவுண்டர் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட
பல்வேறு துறைகளின் சார்பில் 1,166 பயனாளிகளுக்கு ரூ.23.19 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, கூடுதல் ஆட்சியர்
கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, முன்னாள் அமைச்சர்
பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் குணசேகரன், கைம்பெண் நல வாரிய உறுப்பினர் ரேணுகா தேவி,
வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



