சூலூர் மே 05
கோவை மாவட்டம் சூலூரில் அருள்பாலித்து வரும்
அருள்மிகு தையல்நாயகி உடனமர் வைதீஸ்வரர்
கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும்
சுயம்பு திருமேனி கொண்டு தீராத நோய் தீர்த்தருள வல்லவர் சூலூர் அரியபிராட்டி நல்லூர் என்று ஒன்பதாம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட அன்றைய சூலூரில் முதன்மைச் சிறப்புகளை உடைய சிவாலயங்கள் காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதி பேரூர் சிவாலயத்தில் தொடங்கி கரூர் சிவாலயத்தில் முடியும் அவ்வழியே எண்ணற்ற கொங்கு சிவாலயங்கள் பல வரலாற்றுச் சிறப்புமிக்க சூலூர் நகரின் மணிமகுடமாக விளங்குவதும் மூன்று புறமும் நீர் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் சிறப்பு தலமாகும் சிவபெருமான் அருள் லிங்க வடிவமாக உளிபடாத தானாகவே தோன்றிய சுயம்புத் திருமேனி
வரலாற்றிலே பல தீராத நோய்களை எல்லாம் நல்ல எண்ணெய் காப்பு சாற்றி அதனையே அருட்பிரசாதமாக பெற்று உட்கொண்டு அதனை அருமருந்தாகவும் மேலும் லிங்கத்தின் சிரசில் சாற்றிய வில்வ இலையும், விபூதியும் அருட் பிரசாதமாகும். பக்தியும் நம்பிக்கையும் கொண்டு வேண்டுவோர்க்கு பலவிதமான வியாதிகளும் நீங்கி ஆரோக்கியம் அடைந்திட்ட எண்ணற்ற பல அனுபவத்தை ஏராளமானோர்க்கு வைத்திய நாதப் பெருமான் அருளி இருக்கிறார். இன்றளவும் இந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டு வருகிறது. மேலும் சிவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு சான்றாக எந்த கோவிலிலும் இல்லாத வண்ணம் ஸ்ரீ தன்வந்திரி பெருமான், அமிர்த கலசம் ஏந்தி திருக்கோவிலில் தீபஸ்தம்பத்தில் வடக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ வைத்யநாத பெருமானும். ஸ்ரீ தன்வந்திரி பெருமானும் மருத்துவர்களாக இருந்து இத்திருத்தலத்திலே அருள்பாலிப்பது மிகவும் விஷேசம். இங்கு இன்னொரு ஐதீகம் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் நந்திய பெருமானுக்கு எண்ணெய் காப்பிட்டு முறையாக பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்தால் திருமணம் அமைவது கண்கூடாக காணப்படுகின்ற நிகழ்வாகும். ஆகவே, அனைவருடைய எண்ணத்திற்கு ஏற்ப திருக்கோவிலை புனரமைப்பதற்காக சிற்ப சாஸ்திர முறைப்படி பல திருப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் முதல் அனைத்து சன்னிதிகளுக்கும் விமான கோபுரம் முன் மண்டபம் மற்றும் பல்வேறு திருப்பணிகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு
மேலும்
திருப்பணியின் சிறப்பு அம்சமாக இறைமூர்த்திகள் அருட்சக்தி பெறவும் அடியார்கள் வேண்டும் வரம் யாவும் பெறும் பொருட்டு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சீரோடும் சிறப்போடும் நடைபெறவும் 33 திருக்குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகசாலையில் வேதசிவாகம மந்திரங்களும் பன்னிரு திருமுறைகளும் முழங்க 350 க்கு மேற்பட்ட திரவியங்கள் அக்னியில் இட்டு யாக வேள்விகளுடன் அருட் சக்திகள் கருவறையில் இருக்கும் இறைவனுக்கு செலுத்தப்பட்டு முன்னாள் அமைச்சர் கோயமுத்தூர் முன்னாள் மேயர் முனைவர் செ.ம. வேலுச்சாமி தலைமையில் விரிவான ஏற்பாடுகளுடன் பேரூர், பேரூராதீனம் கையிலை புனிதர் சீர்வளர்சீர்
தவத்திரு மருதாச்சல அடிகளார்,
சரவணம்பட்டி,
சிரவையாதீனம் திருப்பெருந்திரு
இராமானந்தா குமரகுருபர சுவாமிகள்
கூனம்பட்டி திரு மடாலய ஆதீனம்
ஸ்ரீலஸ்ரீ இராஜ மாணிக்கவாசக குரு சுவாமிகள், திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை கோவை இணை ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் வடிவுக்கரசி, செயலாளர் பேபி ஷாலினி நிரலில் குறிப்பிட்டபடி நிகழ வைத்தீஸ்வரர் திருவருள் திருப்பணியாளர்கள் காலியாபுரம் சோமசுந்தரம் சிலை துறை அண்ணாதுரை, சாந்தி செல்வராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வீராசாமி, கங்கேசன்,
கும்பாபிஷேக சர்வ சாதகர்கள்
சிவாகம செல்வர் சிவ ஸ்ரீ சிவாஜல சுந்தர குருக்கள்
சிவாகம செல்வர் சிவ ஸ்ரீ சிவாஜல சுப்பிரமணிய குருக்கள்
சிறப்பு சர்வ சாதகம்
சிவ ஸ்ரீ குமார ஞான சிவாச்சாரியார் அருள் மலை
சிவ ஸ்ரீ தேவ சேனாபதி சிவாச்சாரியார்
வடபழனி. சென்னை
சிவ ஸ்ரீ சிவசண்முக குருக்கள்
சிட்னி, ஆஸ்த்ரேலியா மற்றும் ஏனைய திருப்பணியாளர்கள் உழவாரப் பணி குழுவினர் சிவநேயச் செல்வர்கள் மற்றும் ஏராளமான நன்கொடையாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு திருவருள் பெற்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் மூன்று வேளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.