திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, வீராபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வில்லிவாக்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மல்லிகா தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில்…
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது”.
இந்த நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஐ.ஜெபக்குமாரி அனி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆர்.தியாகராஜன், வேளாண் துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பிற துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோரை ஊராட்சி மன்ற செயலர் வீரபத்திரன் சிறப்பாக செய்திருந்தார்.



