ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க தமிழ் சங்கம், குறிஞ்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய விருது வழங்கும் விழாவில் சுமார் 15 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் கராத்தே கலையை பயிற்சி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்ததற்காக மாஸ்டர் அப்துல் அஜீஸ்க்கு கலை செம்மல் விருதும், பயிற்சி பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலைச்சுடர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகர் ஹலோ கந்தசாமி மற்றும் முத்தமிழ் சங்க தலைவர் அமெரிக்க தமிழ் சங்க தலைவர் கே கே ஆர் அகாடமி தலைவர் அவர்களும் ரோகினி கல்லூரி துணை முதல்வர் ரோகிணி கல்லூரியின் தமிழ் பேராசிரியர் மேலும் நடிகை சாகனா சங்கர் ஆகியவர்கள் கலந்து விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



