மதுரை ஏப்ரல் 25
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள சர்வே எண் 87/3C4ல் உள்ள 10.63 சென்ட் இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய
வலையங்குளம் நில அளவையர் (பிர்கா சர்வேயர்)ராமராஜ் (எ) அன்புராஜிடம் (வயது 35) நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய கோரி மனு கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அளவையர் மனுதாரரிடம்
பட்டா மாறுதல் செய்வதற்கு
ரூபாய் 5000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுரேஷிடம் ரசாயனம் கலந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை சர்வேயர் ராம ராஜிடம் வழங்கியதை தொடர்ந்து அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நில அளவையாளர் ராம ராஜிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கையும் களவுமாக கைப்பற்றி உடனடியாக கைது செய்தனர்.
பட்டா மாறுதல் தொடர்பாக சர்வேயர் லஞ்சம் பெற்றது வளையங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரூ5000 லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது.
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics