தஞ்சாவூர் ஏப்ரல் 24.
தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிராம வார்டு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தஞ்சாவூர் மண்டல காங்கிரஸ் சீரமைப்பு மேலாண்மை குழு ஒருங்கிணைப் பாளர் டி என் அசோகன், தஞ்சாவூர் மக்களவை தொகுதி சீரமைப்பு மேலாண்மை குழு ஒருங்கிணைப் பாளர் ராஜா மோகன் அடையாள அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், ராஜா தம்பி ,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் ,வயலூர் ராமநாதன், மாநகர மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் பழனியப்பன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
முன்னதாக தஞ்சாவூர் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளர் ஜான்சன் வரவேற்றார். நிறைவாக அமைப்பாளர் செந்தில் சிவகுமார் நன்றி கூறினார்.